Advertisment

Punnagai Logo

பேஸ்புக் கணக்கே முடங்கும்: திடீர் எச்சரிக்கை

 

சமூக வலைதளப் பக்கங்களில் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்; யாரைப் பற்றி வெண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எல்லையில்லா சுதந்திரம் தனி மனிதனுக்குக் கிடைத்த பின், ஒவ்வொரு மனிதனும் சமூக வலைதளங்களில் தங்கள் நோக்கத்துக்கும் பதிவிடத் துவங்கி விட்டார்கள். இதனால், எந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தனி மனித சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு பக்கம் குரல் எழும்பிக் கொண்டிருக்க, இந்த பிரச்னையை எப்படி கட்டுப்படுத்துவது என புரியாமல், மத்திய அரசே தடுமாறிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளப் பதிவுகளால், தனி மனித பாதிப்புகளைக் கடந்து, ஒரு சமூகமே பாதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்திய உணவு பொருட்கள் மற்றும் உணவு முறைகள் குறித்து, தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் பதிவிடப்பட்டு, பரப்பப்படுகிறது. இதனால், மத்திய அரசு மிகவும் கவலையடைந்திருக்கிறது. அதன் மீது நடவடிக்கையும் எடுக்கத் துவங்கி இருக்கிறது.

இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்களும் பரப்பப்பட்டு வருவதை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கி இருக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை, சமூக வலைதளங்களில் இந்திய உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்பு கூகுள் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் தொழில் நுட்பத் துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையகத்தைச் சேர்ந்தவர்கள் கூறியிருப்பதாவது:

இந்திய உணவுகள் குறித்து தவறான தகவல்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுவதால், உலக அரங்கில் இந்தியான் நன்மதிப்பு முழுவதுமாக குறைந்து விடும். இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவை சாப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என தொடர்ந்து, சமூக வலைதளங்கள் மூலம் செய்தி பரப்பினால், இந்தியாவுக்கு வரும் அன்னிய நாட்டு சுற்றுலாப் பயணிகள், முதலில் இந்தியாவுக்கு வருவதையே தவிர்க்கக் கூடும். அப்படியே இந்தியாவுக்கு வந்தாலும், அவர்கள், இந்திய உணவுப் பொருட்களை தவிர்ப்பர். இதனால், இந்தியாவின் அன்னிய செலாவணி குறையும். இதனால், உணவு சார்ந்த தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தவறான தகவல் பரப்பும் கூகுள், பேஸ்புக் கணக்குகளை முடக்க வேண்டும் என, அந்நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 
 

Advertisment

English Summary

False video in face book

 
NewsFast Logo