Advertisment

Punnagai Logo

ஹேக்கர்களால் திருடப்பட்ட 500 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி...

டிஜிட்டல் சொத்து என்று வர்ணிக்கப்படும் கிரிப்டோகரன்சியில், உலகளவில் பெரும் முதலாளிகள் முதலீடு செய்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களுக்கு தெரியாமல், அவர்களுக்கு சொத்துக்கள் அண்மையில் திருடப்பட்டு வருகின்றன.

அவ்வாறு ஒரு அதிர்ச்சி சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது. ஜப்பானின் டிஜிட்டல்  பங்குவர்த்தகத்தில் பிட்காயின் ஒன்றை மாற்ற முயன்ற அதன் உரிமையாளர், தனது பிட்காயின் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அறிந்தார். 

இதுபோன்று ஜப்பானின் கிரிப்டோகரன்சி சந்தையில் இதுவரை 500 மில்லியன் அளவிலான பிட்காயின் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால், பிட்காயினில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

இதனால், பிட்காயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்கள் தற்போது, அதனை வேகமாக திரும்பப் பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட நாடுகளில்தான் இந்த கிரிப்டோகரன்சிகளும், பிட்காயின்களும் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இதனை, சமூக வலைதளம் மூலம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் முதலீடு செய்யப்படுவது அண்மையில் தெரிய வந்துள்ளது. இதனால், பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு இந்த செய்தி ஒரு எச்சரிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 
 

Advertisment

English Summary

Hackers Steal Over $500 Million From Cryptocurrency Exchange In Japan

 
NewsFast Logo