Advertisment

Punnagai Logo

சிவகார்த்திகேயன் படமும் அதே நாளில் ரிலீஸ் - தியேட்டர்களுக்கு போட்டாபோட்டி 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களும் டிசம்பர் 20, 21-ஆம் தேதிகளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் கனா படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 4 படங்களுக்கு தேதி ஒதுக்குவதிலே பிரச்சனை இருக்கும் நிலையில், கனா படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 
 

Advertisment

English Summary

5 films on 2 days - Theatres crisis

 
NewsFast Logo