Advertisment

Punnagai Logo

பாலியல் தொல்லைகளை பொறுத்துக்கொள்ளும் நடிகைகள் - கஜோல் வேதனை..! 

தங்கள் வேலைக்கு பாதிப்பு வரும் என்பதற்காக, பாலியல் தொல்லைகளை சில நடிகைகள் பொறுத்துக் கொள்ளும் நிலைமை இருக்கிறது என்று, நடிகை கஜோல் கூறியுள்ளார்.

தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி–2 படங்களில் நடித்துள்ள இந்தி திரையுலகின் முன்னணி நடிகை கஜோல் பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘பாலியல் தொல்லைகள் சினிமாவில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருக்கிறது. ஹாலிவுட்டில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேசும் ‘மீ டூ’ இயக்கம் இந்தி பட உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் வரவேண்டும்.

பாலியல் தொல்லை குறித்து சிலர் தைரியமாக பேசுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.  சில நடிகைகள் தங்கள் வேலைக்கு பாதிப்பு வரும் என்று இதுபோன்ற தொல்லைகளை பொறுத்துக் கொண்டு இருக்கும் நிலைமை இருக்கிறது. பாலியல் தொல்லைகளை சந்தித்தவர்கள் அதை வெளிப்படுத்த வெட்கப்பட வேண்டியது இல்லை’’ இவ்வாறு கஜோல் கூறினார்.

 
 

Advertisment

English Summary

Actress Kajol on sexual harassment

 
NewsFast Logo