Advertisment

Punnagai Logo

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் பதில்

உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு தைரியமாக பதிலளித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக இவர் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் கனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருக்கிறார். இதுதவிர இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

பிஸியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர்கள் ட்விட்டரில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது. அதற்கு பதிலளித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரஜினிகாந்த், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி என்று பதிலளித்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

Aiswarya Rajesh - favourite actor

 
NewsFast Logo