Advertisment

Punnagai Logo

வேதனைப்படுகிறேன் - கமல் மகளின் வருத்தம்..!

அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கானதால் மும்பை போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். 

அக்‌ஷராஹாசனின் அந்தரங்கப்  படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் உலா வந்தது. இதுகுறித்து இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் அக்‌ஷராஹாசன் பதிவிட்டுள்ளதாவது :

"அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் எனக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருக்கிறேன். 

நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அற்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வேதனை தருகிறது" என அவர் தெரிவித்துள்ளார். 
 

 
 

Advertisment

English Summary

Akshara expresses her worry

 
NewsFast Logo