Advertisment

Punnagai Logo

சீனாவில் அடுத்தடுத்து ஹிட் ஆகும் அமீர்கானின் படங்கள்...

சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (Secret Superstar) என்ற பெயரில் படத்தை தயாரித்து அதில் நடித்துள்ள அமீர்கான் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் இத்திரைப்படத்தை வெளியிட்டார். 

தங்கல் படத்தைத் தொடர்ந்து, அமீர்கானின் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது. கடந்த 19-ம் தேதி சீனாவில் திரையிடப்பட்ட இந்தப்படத்தில் நடித்துள்ள 14 வயதுடைய இஸ்லாமிய சிறுமியின் நடிப்பும், அவரது பாடல்திறமையும் சீன ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளதாக அந்நாட்டு திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமீர்கானின் இந்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில், அரசியலும் பொருளாதாரமும் கலந்துள்ளது என்று சீன மக்கள் மனம் திறந்து பாராட்டுகின்றனர். இதன்மூலம் அமீர்கானுக்கு சீனாவில் ஒரு ரசிகர் பட்டாளமே திரண்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

An Aamir Khan Film Is A Huge Hit Again In China: Foreign Media On Secret Superstar

 
NewsFast Logo