Advertisment

Punnagai Logo

அறம் இயக்குனரின் அடுத்த படம் ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் கத்தி. விவசாயத்தையும் , தண்ணீர் அரசியலையும் பற்றிப் பேசிய இந்த படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த கத்திப் படத்தின் கதை தன்னுடையது என்று கோபி நயினார் நீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனாலும் திரையுலகம் கோபி நயினாரை நம்ப மறுத்தது. கடைசியில் வேறு கதையை தயார் செய்ய ஆரம்பித்தார்.

புதிய கதையோடு வலம் வந்த கோபி நயினாரை நயன்தாரா ஆதரித்தார். நயன்தாராவை வைத்து இயக்கிய கதைதான் அறம் என்ற   படமாக வெளிவந்தது. படம் தொட்டி எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது.பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை அள்ளியது.

அறம் என்ற வெற்றிப்படம் மூலமாகத் தான் கோபி நயினார் தன்னை திரையுலகினர் முன்னால் நிரூபிக்க முடிந்தது..

கோபிநயினார் சமீபத்திய ஒரு பேட்டியில் ,,, என் கதையைப் படமாக எடுக்கிறேன் என ஒரு சிலர் அரிசியை விதைத்து விட்டு உமியை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அரிசி என்னிடம் தான் இருக்கிறது. நான் மீண்டும் அதே கதையைப் படமாக எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

இதனால் கோபி நயினார் மறைமுகமாக இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜையை சாடியுள்ளதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. 

எது எப்படியோ நமக்கு ஒரு நல்ல சினிமா கிடைத்தால் சரி... 

 
 

Advertisment

English Summary

Aram director next movie

 
NewsFast Logo