Advertisment

Punnagai Logo

யூடியூப் தளத்தை அலறவிட்ட அமெரிக்க பாடகி..!

பிரபல அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேவின் 'thank you, next' பாடல் ஆல்பம், வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 6 கோடி வியூஸை தாண்டிவிட்டது. முன்னாள் காதலர்களுக்கு சமர்ப்பணமாக அரியானா வெளியிட்டுள்ள இந்த பாடல் நேற்று வெளியானதிலிருந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறது.

யூடியூப் சாதனை பாடல்களான 'Gangnam Style', 'Despacito', 'Shape of you' போன்றவற்றின் ரெக்கார்டுகளை இந்த ஆல்பம் எளிதாகத் துவம்சம் செய்துவிடும் என்கின்றனர் இதன் ரசிகர்கள்.  

தற்போது யூடியூபில் வந்துள்ள புதிய ப்ரீமியர் (Premiere) வசதியில் வெளியான இந்தப் பாடலை வெளியாகும்போது ஒரே நேரத்தில் 8.29 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  லைவ்வாக பார்த்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் பார்த்ததால் கமென்ட் வசதியே செயலிழந்துவிட்டதென நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

இதை யூடியூப் தளமும் ஒப்புக்கொண்டு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அதில் 'அரியானா கிராண்டேவின்  'thank you, next' பாடல் இணையத்தையே உலுக்கும் அளவுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் தளத்தின் கமென்ட்ஸ் பகுதியையாவது பாதித்துள்ளது' என்றது யூடியூப். 
 

 
 

Advertisment

English Summary

Ariana Grande's thank u, next

 
NewsFast Logo