Advertisment

Punnagai Logo

எனக்கு பீர் வேணும்... ஓவியாவின் புதிய பாடல் - சர்ச்சை 

நடிகர் சிம்பு மற்றும் ஓவியா அகியோரை இணைத்து பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றுகூட வதந்தி பரவியது. அதெல்லாம் பொய் என இருவருமே விளக்கம் தெரிவித்தனர்.

இது ஒருபுறமிருக்க ஓவியா அடுத்து நடிக்கும் 90ml படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து 'பீர் அண்ட் பிரியாணி' என்கிற பாடல் புத்தாண்டு ட்ரீட்டாக வெளியாகும் என அறிவித்தனர். அதன்படி ஓவியா நடித்துள்ள 90 எம்.எல் படத்தின் பாடலை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடிகையாக நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்து ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டது. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த ஒரு வருடமாக தமிழில் அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த சிலுக்குவார் பட்டி சிங்கம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடனமாடியிருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து ஓவியா நடித்திருக்கும் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 90 எம்.எல் படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பீர் பிரியாணி பாடலின் லிரிக்கல் வீடியோவை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார். ஆனால் இப்படி ஒரு நெகட்டிவ் தீம் பாடல் தேவையா என்ற சர்ச்சையும் உருவாகியுள்ளது. 
 

 
 

Advertisment

English Summary

Beer song controversy

 
NewsFast Logo