Advertisment

Punnagai Logo

வெடிக்கும் கமல் : கதறும் ஐஸ்வர்யா, யாஷிகா - வெளியேறுவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  யார் வெளியேற போகிறார்கள் என்பதை  சொல்லும் விதமாக இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் நடந்து முடிந்த ‘ராணி மகாரணி’ டாஸ்க் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சர்வாதிகார ராணியாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு மக்களிடத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிகழ்ச்சி சமூக அக்கறையின்றி அநாகரிகமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அவரை பற்றி சமூகவலைதளங்களில்  பரவும் செய்திகளுக்கு தனக்கே  உரித்தான பாணியில்,  கமல் இந்த ஷோ மூலமாக ஈஸியா மக்கள் கிட்ட பேசுறாரேன்னு சிலருக்குப் பொறாமை என்று  ஒரே போடாக போட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.

பாலாஜியின் மீது  குப்பை கொட்டிய ஐஸ்வர்யாவிடம் உங்க பர்சனல் வென்ஜன்ஸ் இந்த டாஸ்க்ல  நீங்க தீர்த்துக்கலாம்னு பிக்  பாஸ் சொன்னாரா? என்கிட்ட பொய் சொல்ல  கூடாதுனு நான் அந்த பிக் பாஸையே கூப்பிட்டு விசாரிப்பேன் என்று சொல்ல ஐஸ்வர்யா பதில்  சொல்ல முடியாமல் திக்கு முக்காடினார். அதேபோல் மும்தாஜிடம் இந்த வீட்டில் மும்தாஜூனு  ஒரு மானஸ்தன்  இருந்தாங்களே அவங்க அப்போ எங்க போங்கன்னு  கேட்க, அது டாக்ஸ்னு நெனச்சேன்னு சொல்லி சமாளித்தார் மும்தாஜ்.

இந்த நிலையில் இன்றைய  நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'இந்த குடும்பத்திலிருந்து ஒருவரை வெளியேற்றப் போகிறோம், மத்தவங்களாம் புலி வருது புலி வருதுன்னு விளையாடிட்டு இருந்தாக.. இப்போ நிஜமாகவே புலி இங்க வருது'ன்னு என்று கமல் சொல்ல, எல்லோர் முகமும் பீதியில் உறைந்து போகிறது. 'உள்ளே இருக்குறது சிறையும் இல்ல! வெளியே வருவது விடுதலையும் இல்ல' என்று சொல்ல யாஷிகா, ஐஸ்வர்யா என்ன இருவரும் மாறி மாறி அழுகின்றனர். 

இதனால்  இன்றைய போட்டியிலிருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது. 

 
 

Advertisment

English Summary

Bigg boss Kamal's angry face

 
NewsFast Logo