Advertisment

Punnagai Logo

பிலிம்ஃபேர் 2018 விருது: வித்யாபாலன், இர்ஃபான் கானுக்கு விருது...

மும்பையில் உள்ள வோர்லியில் 63-வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கரன் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர், நடிகையர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்சய்குமார், ரன்வீர்சிங், பரினீத்தி சோப்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பாலிவுட் நடிகை வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த நடிகருக்கான விருது இர்ஃபான் கானுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. வித்யாபாலனுக்கான விருதை மூத்த நடிகை ரேகா வழங்கினார்.

 
 

Advertisment

English Summary

Filmfare Awards 2018: Vidya Balan, Irrfan Khan Are Top Winners

 
NewsFast Logo