Advertisment

Punnagai Logo

தனுஷின் முதல் ஹாலிவுட் படத்திற்கு சர்வதேச விருது..!

நடிகர் தனூஷ், ஹாலிவுட்டில்  நடித்த முதல் திரைப்படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’. இந்தப் படம் உலகம் முழுவதும் இருக்கும் பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது, கென் ஸ்காட் இயக்கிய இந்தப் படத்துக்கு, சர்வதேச அளவில் பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடந்த நார்வே திரைப்பட விழாவிலும், ஜர்னி ஆஃப் பகீர் படம் திரையிடப்பட்டது. அந்த விழாவில் ‘ரே ஆஃப் சன்ஷைன்’ என்ற விருதை இப்படம் பெற்றுள்ளது . இது குறித்து கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில், நார்வே திரைப்பட விழாவில், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பகீர் ‘ரே ஆஃப் சன்ஷைன்’ விருதை வென்றுள்ளது. இந்த விருது வழங்கிய விழாவின் ஜூரி, இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறினார்கள்’ என்று உணர்வு பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

 
 

Advertisment

English Summary

International Award for Dhanush's First Hollywood Film

 
NewsFast Logo