Advertisment

Punnagai Logo

நடிகர் பிரபுவுடன் எனக்கு அழகான உறவு இருந்தது உண்மை தான் - மனம் திறந்த குஷ்பு

  பிரபல திரைப்பட நடிகரான பிரபுவும், நடிகையுமான குஷ்புவும் அவர்கள் நடித்த காலக்கட்டங்களில் காதலித்ததாகவும், இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின் இந்த ஜோடியை சிவாஜி குடும்பத்தினர் பிரித்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இது குறித்து இருவரும் பதில் கூறாமல் இருந்த நிலையில், நடிகை குஷ்பு சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், எனக்கும் பிரபுவுக்கும் அழகான உறவு இருந்தது.

அது ஒரு அழகிய தருணம், அந்த தருணம் ஒரு சமயத்தில் முடிந்து போனது. அதன் பின் சுந்தர் சி எனும் அழகான தருணம் என் வாழ்வில் வந்திருக்கிறது.

இது தான் நிஜம். குஷ்பூ, சுந்தர் சி உறவு தான் நிலையானது. இதை யாராலும் பிரிக்க முடியாது. பிரபுவுடனான நினைவுகளை இப்போது கூறி பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமான மனநிலையிலிருக்கும் அவரை ஏன் சங்கடப் படுத்த வேண்டும்.

எனக்கும் மகளிருக்கிறாள். எங்கள் வாழ்க்கையும் மிக அழகான தருணங்களால் இருக்கிறது. வாழ்வில் பல அழகான தருணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரபுவுடனான நட்பும் அப்படியொரு தருணம் அது முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் சுந்தர் சி என்னை காதலிப்பதாக கூறும் போதே திருமணத்தை மனதில் வைத்து தான் காதலை கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், நான் உடனே சம்மதித்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

 
 

Advertisment

English Summary

It is true that I had a beautiful relationship with the actor prabhu

 
NewsFast Logo