Advertisment

Punnagai Logo

ரொம்ப கஷ்டமாக இருந்தாலும், எனக்கு அது பிடித்திருந்தது !! மனம் திறக்கும் அனுஷ்கா

வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘சுய் தாகா’. 2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது. மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

 

 

வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடித்துள்ளார்.  "மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான். எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான். கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம். சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள், தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்" என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

 

 

'வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும். வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது" என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

It's very difficult, but I liked it

 
NewsFast Logo