Advertisment

Punnagai Logo

லாரன்ஸ், ஓவியா நடிப்பில் காஞ்சனா 3 - தள்ளிப்போகும் ரிலீஸ் 

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு பின்னரே ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. 

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில், திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது.

தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் காஞ்சனா-2 திரைப்படமும் வெளியானது. இதன் அனைத்துப் பாகங்களிலும் ஹீரோவாக லாரன்ஸே நடித்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். 

இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 
 

Advertisment

English Summary

Kanchana 3 release postponed

 
NewsFast Logo