Advertisment

Punnagai Logo

அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். 

விஜய்யுடன் 2வது முறையாக ஜோடி சேர்ந்ததில் உற்சாகமாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

"சாவித்திரி போல மீண்டும் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அந்த படம் அனுபவத்தையும் பக்குவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இன்னொருமுறை அப்படி என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு சிறப்பாக வந்தது. அது ஒரு மேஜிக். முழுக்க முழுக்க கதாநாயகிக்கான படங்களில் மட்டுமே நடிக்க முடியாது. சண்டக்கோழி, சர்கார் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். அதுதான் ஒரு கதாநாயகிக்கு நல்லது. பெரிய படங்களில் ஒரு நல்ல வேடத்தில் இருப்பது என்பது நடிகைக்கு அவசியம்.

நடிக்க வந்ததில் இருந்து வேகமாக தொடர்ந்து நடித்துள்ளேன். எனவே சில மாதங்கள் ஓய்வில் இருக்கிறேன். வயலின் கற்றுக்கொள்கிறேன். சமைப்பேன். உடற்பயிற்சி செய்கிறேன். 20க்கு மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு மீண்டும் வேகம் எடுப்பேன்.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்துவிட்டேன். அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்." இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார். 

 
 

Advertisment

English Summary

Keerthi Suresh - wishes

 
NewsFast Logo