Advertisment

Punnagai Logo

பேட்ட படத்தில் மரண மாஸ் - ஆட்டம் போடவைக்கும் கும்மாங்குத்து வீடியோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். 

டிசம்பர் 9 அன்று பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் வரும் இன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்கிற பாடல் வெளியாகவுள்ளது. விவேக் எழுதியுள்ள இப்பாடலை எஸ்பிபி-யும் அனிருத்தும் பாடியுள்ளார்கள்.

இதற்கு அடுத்ததாக 7-ம் தேதி 2-வது பாடல் வெளியிடப்படுகிறது. இதனால், முழுப் பாடல்களின் வெளியீட்டுக்கு முன்பு இரு பாடல்கள் வெளியாகவுள்ளன. 

இந்நிலையில் மரண மாஸ் பாடல் ஒலிப்பதிவு செய்த விதத்தை விடியோவாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 

இதில் ஆட்டம் போட்டபடி ஒலிப்பதிவு செய்துள்ள அனிருத் பார்வையாளர்களையும் ஆட்டம் போடவைக்கிறார். 

 

 
 

Advertisment

English Summary

Marana Mass - recording video

 
NewsFast Logo