Advertisment

Punnagai Logo

இந்தியன் 2 படத்தில் நயன்தாரா ?

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்த இந்தியன் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது. 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் லஞ்சத்திற்கு எதிரான கதைக் கருவைக் கொண்டது. இந்தியன் தாத்தாவாக கமல் நடித்த கதாபாத்திரம் பல பேரால் பாராட்டப்பட்டு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதையும் கமலுக்குப் பெற்றுத்தந்தது.

தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறது.இந்த படத்தில் ஒரு வலிமையான புரட்சிப் பெண் கதாபாத்திரம் இடம் பெறுகிறதாம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

குறிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா  நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்று நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.  இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமானால் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 அமையும். 

ஆனால் இதுபற்றி எந்த தகவலும் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 

Advertisment

English Summary

Nayantara in Indian 2

 
NewsFast Logo