Advertisment

Punnagai Logo

எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் ஒவைசி...

பத்மாவத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ராஜ்புத் வம்சாவழியினர் எப்படி ஒற்றுமையுடன் இருக்கிறார்களோ, அதுபோல், இஸ்லாமியர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு ஒன்றுகூடி ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஆசாத்தத்தின் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் மக்களவை உறுப்பினரான ஒவைசி, பத்மாவத் திரைப்படத்திற்கு ராஜ்புத் அமைப்பினர் எவ்வாறு கண்டிப்பான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனரோ, அதுபோன்று, பத்மாவத் திரைப்படத்திற்கு இஸ்லாமியர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

இஸ்லாமியர்கள் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்காமல், பத்மாவத் திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்றும் ஒவைசி கூறியுள்ளார்.  பத்மாவத் திரைப்படத்தை இஸ்லாமியர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் ஒவைசி வலியுறுத்தியுள்ளார்.

 
 

Advertisment

English Summary

Owaisi calls Padmaavat ‘rubbish’, wants Muslims to learn from Rajputs’ solidarity against film’s release

 
NewsFast Logo