Advertisment

Punnagai Logo

பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்கத் தடை....

பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது.

வரும் 25-ம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ள சூழலில், பத்மவாத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என்றும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும் அதன் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பத்மாவத் திரைப்படத்திற்கு எந்த மாநிலமும் தடை விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Padmaavat ban in six states stayed by Supreme Court

 
NewsFast Logo