Advertisment

Punnagai Logo

100 கோடி சாதனையைத் தொட்ட ’பத்மாவத்’

பத்மாவத் படம் திரையிட்ட 4 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் - ஷாகித் கபூர் நடிப்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் `பத்மாவத்'.

குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பால்  அங்கு மட்டும் பத்மாவத் படம் வெளியாகவில்லை .அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. 

 கடந்த வியாழக்கிழமை வெளியான பத்மாவத் படம் முதல் நாளில் ரூ.19 கோடியும், அடுத்தடுத்த நாட்களில் 32 கோடி, 27 கோடி, 31 கோடி என மொத்தமாக ரூ. 114 கோடிகளை வசூல் செய்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. அடுத்து வரும் வாரங்களில் படத்தின்  வசூல் மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 

Advertisment

English Summary

'Padmavat' to touch 100 crore record

 
NewsFast Logo