Advertisment

Punnagai Logo

பேட்ட, விஸ்வாசம் இணையத்தில் அவுட் - படக்குழுவினர் டவுட் 

ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் நேற்று வெளியான 12 மணிநேரத்தில், இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் நேற்று வெளியானது. இவர்களது ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இரண்டு படங்களுக்கும் சிறப்பான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இவ்விரு படங்களும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. பேட்ட படம் வெளியான 12 மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிட்டது. அதுவும் ஹெச்.டி. தரம் கொண்ட ப்ரிண்டில் வெளியாகியுள்ளது. அதை பலரும் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். விஸ்வாசம் அஜித்தின் விஸ்வாசம் படத்தை பேட்ட போன்றே ஹெச்.டி. ப்ரிண்ட்டில் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். 

தமிழ் ராக்கர்ஸில் படத்தை டவுன்லோடு செய்து பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக பேட்ட, விஸ்வாசம் படங்களை இணையத்தில் வெளியிட தடை விதித்த நிலையிலும், தற்போது திருட்டு தனமாக இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கு பலத்த சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 
 

Advertisment

English Summary

Petta, Viswasam leaked in internet

 
NewsFast Logo