Advertisment

Punnagai Logo

பத்மாவத் திரைப்படம் வெளியிடும் தியேட்டர் மீது தாக்குதல்...

பிரபல ஹாலிவுட் திரைப்படமான பத்மாவத் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்கள் தடை விதித்த சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.

தடை விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், திரைப்படத்திற்கும், படத்தை பார்வையிட வருபவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்றும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், பத்மாவத் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கப்போவதில்லை என ராஜ்புத் அமைப்பினர் உறுதிபட கூறி வருகின்றனர்.

இந்த சூழலில், குஜராத்தின் அகமதாபாத்தில், பத்மாவத் திரைப்படம் வெளியிடப்படும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டிந்த ராஜ்கன்ஸ் தியேட்டரை மர்ம நபர்கள் தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, திரைத்துறையினர் கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

 
 

Advertisment

English Summary

Protesters vandalised Rajhans Cinemas in Ahmedabad late last night

 
NewsFast Logo