Advertisment

Punnagai Logo

ராணா நடிக்கும் புதிய வரலாற்று படம்

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் ராணா. இவர் தற்போது இயக்குனர் கே.மது இயக்கத்தில் ‘மார்த்தாண்டவர்மா தி கிங் ஆப் திருவாங்கூர்’ என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதையொட்டி அவர், திருவனந்தபுரம் வந்து பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

மேலும் கவடியாறு அரண்மனைக்கு சென்று மார்த்தாண்டவர்மனின் அரச குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அரச குடும்பத்தினர், மார்த்தாண்டவர்மா வரலாறு குறித்த 2 புத்தகங்களை நடிகர் ராணாவுக்கு வழங்கினார்கள். 

இந்த படம் குறித்து நடிகர் ராணா கூறுகையில், சரித்திர கதாபாத்திரத்தில், அதுவும் அரசர் மார்த்தாண்டவர்மா வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் நடிப்பது மிகவும் பெருமை மிக்கது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். 

இயக்குனர் கே.மது கூறும்போது, கடந்த 8 ஆண்டுகளாக நடந்த ஆய்வுக்கு பின், அரசர் மார்த்தாண்டவர்மா வரலாற்றின் அடிப்படையில் இந்த திரைப்படத்தின் கதை தயாராகி உள்ளது. பாகுபலி திரைப்படத்தை போன்று இந்த திரைப்படத்தையும் 2 பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார் .

 
 

Advertisment

English Summary

Rana's new historical film

 
NewsFast Logo