Advertisment

Punnagai Logo

கூட்டு தற்கொலை செய்யப்போவதாக ராஜஸ்தான் பெண்கள் மிரட்டல்... எதற்காக?

பத்மாவத் திரைப்படத்தை ராஜஸ்தானில் திரையிட்டால், கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பெண்கள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

13.ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வரலாற்றில், ராணியின் கணவரைப் பிடித்து வைத்துக்கொண்ட அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினியை அடைய விரும்பியதாகவும், ஆனால், ராணி தனது பணிப்பெண்கள் ஆயிரம் பேருடன் கில்ஜியின் முன்னர் தீக்குளித்து உயிர்துறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது பத்மாவத் படத்தில் ராணி பத்மினியின் கதாபாத்திரம் வேறுமாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ராஜ்புத் மற்றும் கர்னா சேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். ராஜஸ்தானில் பத்மாவத் திரைப்படம் திரையிடப்பட்டால், தாங்கள் ராணி பத்மினியைப் போல், தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதுவரை ஆயிரத்து200 பெண்கள் தீக்குளிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளதும் ராஜஸ்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 

Advertisment

English Summary

Stop Padmaavat Or We'll Jump Into Fire, Warn Hundreds Of Rajasthan Women

 
NewsFast Logo