Advertisment

Punnagai Logo

மதுரவீரன் படத்தின் கதை இதுதான்-விவரிக்கும் சண்முகப்பாண்டியன்

நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் மதுர வீரன். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இயக்குகிறார். மீனாட்சி , மற்றும் சமுத்திர கனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . வரும் பிப்ரவரி -2 தேதி படம் வெளியாகவிருக்கிறது.

 

 

 

இந்த படத்தைப் பற்றி ஷண்முகப்பாண்டியன் கூறியதாவது :-   

`மதுரவீரன்' படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசியிருக்கும் என்று சொல்லமுடியாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும், இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் சொந்த வாழ்கையில் உள்ள பிரச்சனையை நோக்கி நகரத் தொடங்கும். அதிலிருந்து ஹீரோ - வில்லன் சண்டைக்காட்சிகள் நோக்கி சென்றுவிடும். 

படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை இருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் ஜல்லிக்கட்டை விட்டு கதை வெளியே செல்லாது. இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் `மதுரவீரன்' படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால் தான் இப்படம் உருவானது. 

 

 

படத்தில் மெரீனாவில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக கொள்ளாமல், போராட்டத்திற்கு காரணம் கிராமத்தில் தான் பிரச்சனை வருகின்றது. அதனால் தான் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை, அதற்கு தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராட்டம் தோன்றியது. 

கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன? எதற்காக ஜல்லிக்கட்டு நடக்க தடை ஏற்பட்டது என்பதை பற்றிய படம் தான் `மதுரவீரன்'. எல்லாருக்கும் பெரிய இயக்குனருடன், பெரிய நடிகையுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை உள்ளது. தொடர்ந்து  இந்த மாதிரியான சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் தான் நடிப்பேன்''

என்று  மதுரவீரன் படத்தின் கதாநாயகன் சண்முகபாண்டியன் கூறினார்

 
 

Advertisment

English Summary

This is the story of Madura veran film - Shanmugapandian

 
NewsFast Logo