Advertisment

Punnagai Logo

வைரமுத்து மீது சின்மயி கூறும் செக்ஸ் புகாரில் உண்மையில்லை!

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சின்மயி கூறுவதில் உண்மையில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற "வீழ மாட்டோம்" நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த அறைக்கு தன்னை தனிமையில் அழைத்ததாக பாடகி சின்மயி பகீர் தகவலை தெரிவித்திருந்தார்.

7 தேசிய விருதுகளை பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் இந்த குற்றச்சாட்டு, தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருவதாகவும், உண்மையைக் காலம் சொல்லும் என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சின்மயி குறிப்பிட்ட சுவிடசர்லாந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சுரேஷ் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சின்மயி கூறுவது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. வைரமுத்து மீது பொய்யாக குற்றம்சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என சின்மயிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 

Advertisment

English Summary

Vairamuthu defended by event manager

 
NewsFast Logo