Advertisment

Punnagai Logo

சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து முற்றுப்புள்ளி..! 

தன்மீதான பாடகி சின்மயி விமர்சனங்களுக்கு மவுனம் சாதித்து வந்த கவிஞர் வைரமுத்து முதல் முறையாக பதில் அளித்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக சில பிரபலங்கள் குறித்து வரும் பாலியல் புகார்களை பதிவிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில் முதலில் மவுனம் சாதித்துவந்த வைரமுத்து,  இக்குற்றச்சாட்டுகள் குறித்து முதல் முறையாக  பதிலளித்துள்ளார். 

தனது பதிவில் அவர் சின்மயியோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதிலை ட்விட்டரில் அவர் சுறுக்கமாக தெரிவித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும். — வைரமுத்து" இவ்வாறு அவர் கூறியுள்ளார்

 
 

Advertisment

English Summary

Vairamuthu replies

 
NewsFast Logo