Advertisment

Punnagai Logo

விஜய் படம் தீபாவளிக்கு ரிலீஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கொல்கத்தாவுக்கு சென்றிருக்கிறதாம். ஏற்கனவே விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான `கத்தி' படத்தின் சில காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

 
 

Advertisment

English Summary

Vijay's film will be released to Deepavali

 
NewsFast Logo