Advertisment

Punnagai Logo

காதலி அனிஷா - கட்டிடம் கட்டிய பின்னரே கல்யாணம் : விஷால் அறிவிப்பு  

அயோக்யா படத்தில் பிசியாக இருக்கும் விஷால், ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறினார். 

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் மனுதாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடிகர் விஷால் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். நடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல செய்திகள் உலாவின. ஆனால், அதனை வரலட்சுமி தரப்பு தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால், விஷாலோ லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்வேன் என சின்ன ஹிண்ட் கொடுக்க, அந்த செய்தி மேலும் பரவ ஆரம்பித்தன.

பின்னர் பலமுறை திருமணம் பற்றி கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும், நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என்றும் பலவாறு கூறிவந்தார்.

தற்போது முதல் முறையாக அவரே தனது திருமண தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா - தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார்.

திருமணம் பற்றி ‘அயோக்யா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலிடம் கேட்டபோது கூறியதாவது:-

"எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும்.

இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண தேதியை இந்தவார இறுதியில் அறிவிப்போம். அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

Vishal announces his marriage

 
NewsFast Logo