ஒரு கல்லூரியில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தாலும் முதல்வர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். ஆனால் ஒரு கல்லூரியில் ஒரு முதல்வரும், ஒரு மாணவரும் மட்டும் இருக்க முடியுமா? ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் இப்படியொரு அபூர்வ கல்லூரி இருக்கிறது.
அங்குள்ள சமஸ்கிருத கல்லூரியில் 5 ஆண்டு பி.ஏ., சமஸ்கிருதப் பாடத்தை எடுத்துப் படிக்க யாருமே இல்லை. ஒரே ஒரு மாணவரும், ஒரு முதல்வரும் மட்டுமே இருக்கிறார்கள்.
சமஸ்கிருதத்தை தமிழ்நாடு மட்டுமே எதிர்ப்பதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கூறும் நிலையில் ஆந்திரா மாநிலத்திலும் சமஸ்கிருதத்தை விரும்பிப் படிக்க யாரும் முன்வரவில்லை என்ற உண்மையை ஆங்கில நாளிதழ் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
1860 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப்பழமையான கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாணவர்கள் சேராததற்கு அரசு உதவித்தொகை கிடைக்காதது, , விடுதி வசதிக்குறைவுகளே காரணம் என்று கல்லூரி முதல்வர் கூறியிருக்கிறார்.
English Summary
A Principal and a Student - a rare college in Andhra Pradesh