தேர்வு வினாத்தாள் கசிவதை தடுக்க சி.பி.எஸ்.இ, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது.
அதாவது,தேர்வு மையத் தேர்வாளர்கள் தேர்வு தொடங்க அறை மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் தேர்வாளர்கள் ஓடிபி எனப்படும் ஒருமுறை ரகசியக் குறியீடு அல்லது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் தங்களை அடையாளங்களை பதிவிட்ட பிறகே வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான ஆப்ஷன்களை பெற முடியும்.
மேலும் பதிவிறக்கம் செய்யப்படும் வினாத்தாள் பக்கத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தின் அடையாளக் குறியீடு வாட்டர் மார்க்காக இருக்கும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதை தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இணைய வழியில் கண்காணிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த முறையை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் வகுப்பு இடைத் தேர்வு ஒன்றில் பரிட்சாத்த முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தியதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
English Summary
"Microsoft" to help prevent the leakage of the question