Advertisment

Punnagai Logo

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

 வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

 வெவ்வேறு திசையில் இருந்து வரும் காற்று உள் தமிழகத்தை நோக்கிச் செல்வதாலும், குமரி பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் திங்கட்கிழமை (இன்று) மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். உள்தமிழகத்தில் சில இடங்களில் இடி, சூறைக்காற்றுடன் மழை பெய்யும்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை 50, திருப்பூர், கீரனூர், பெரியாரில் தலா 40, தாராபுரம், திண்டுக்கல், தாளாவடி, போடிநாயக்கனூரில் தலா 30, அம்பாசமுத்திரம், பீளமேடு, கழுகுமலை, வத்திராயிருப்பு, மாரண்டஹள்ளி, கொடைக்கானல், நடுவட்டத்தில் தலா 20 மி.மீ. மழை பெய்துள்ளது.

 
 

Advertisment

English Summary

Today's rainfall in Tamil Nadu - Weather Center information

 
NewsFast Logo