Advertisment

Punnagai Logo

ரெட்மி 5 - மார்ச் 13-இல் வெளியிடும் சியோமி நிறுவனம்

புதிய டீசரில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. நேரலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வீடியோ இறுதியில் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த டீசர் இடம்பெற்றிருக்கிறது. 

அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 5 என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக ரெட்மி 5 வெளியாக இருக்கிறது.

அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 18:9 ரக டிஸ்ப்ளே கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும். சியோமி இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை ரூ.6999-க்கும் குறைவாக நிர்ணயம் செய்து வரும் நிலையில், ரெட்மி 5 விலை இவ்வாறு நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

சியோமி ரெட்மி 5 சிறப்பம்சங்கள்:

- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்

- அட்ரினோ 506 GPU

- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்

- 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9

- ஹைப்ரிட் டூயல் சிம்

- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரேச்சர்

- 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- கைரேகை, இன்ஃப்ராரெட் சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரெட்மி 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும், பிளாக், லைட் புளூ, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 

Advertisment

English Summary

Redmi 5 - Xiaomi company to release on March 13

 
NewsFast Logo