Advertisment

Punnagai Logo

குழந்தை நன்றாக படிக்க வேண்டுமா? - இரண்டு ஆண்டுக்கு தாய்ப்பால் கொடுங்கள்

‘முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 8.20 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படும்’ என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பான யுனிசெப், உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும் மற்றும் அதற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் பத்து முக்கிய வழிமுறைகளை நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுவது நோய் தொற்றுகள் தாக்காதவகையில் குழந்தையை பாதுகாக்கும்.

பகுதியாக தாய்ப்பால் கொடுப்பது அல்லது தாய்பாலே கொடுக்காமல் இருக்கும்போதுதான் வயிற்று போக்கு மற்றும் பிற நோய் தொற்றுகளால் குழந்தைகள் இறக்கும் அபாயம் ஏற்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இந்த அடிப்படை வழிமுறைகளின்படி தாய்ப்பால் ஊட்டுவதை ஒழுங்குப்படுத்தினால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதனால், குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுக்க முடியும். தாய்ப்பால் மூலமாக குழந்தைகள் நல்ல அறிவுத்திறன் பெறுகின்றனர்.

பள்ளிக்கு ஒழுங்காக செல்வது, நன்றாக படிப்பது, பெரியவர்களான பிறகு அதிகமாக சம்பாதிப்பது ஆகியவற்றுடன் தாய்ப்பால் சம்பந்தப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைக்கப்படுகிறது. பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட 8.20 லட்சம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Should the child learn better? - Give mother milk for two years

 
NewsFast Logo