Advertisment

Punnagai Logo

59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன் பெறலாம் - இணையதளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் 

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடிவரை கடன் பெறுவதற்கான புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

"சிறு, குறு, நடுத்தர தொழில் தொடங்க எளிதாக கடன் பெறும்வகையில் இந்த இணையதளம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பித்து, 59 நிமிடங்களில் ரூ.1 கோடிவரை கடன் பெறலாம். நெரிசல் இன்றி எளிதாக கடன் பெற இதில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பலம் சேர்த்துள்ளன. வேளாண்மைக்கு பிறகு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிப்பது, இந்த தொழில்கள்தான்.

எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா பல இடங்கள் முன்னேறி உள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, பொருளாதார வல்லரசாக ஆகி உள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்காக மத்திய அரசு 12 முடிவுகளை எடுத்துள்ளது. இவை தீபாவளி பரிசாக அமையும். சிறு தொழில்களுக்கு புதிய தொடக்கமாக அமையும். 4-வது தொழில் புரட்சிக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது" என்று மோடி பேசினார்.

 
 

Advertisment

English Summary

1 Crore loan in 59 minutes

 
NewsFast Logo