Advertisment

Punnagai Logo

மும்பை பள்ளி மாணவர்களில் 25% பேருக்கு ’தம்’ அடிக்கும் பழக்கம்

மும்பையில், பள்ளிகளில் படிக்கும் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் 25 சதவீதம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.


மும்பை, மஜகாவில் உள்ள பிரின்ஸ் அலிகான் மருத்துவமனை, மணிபால் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மஜகாவ் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் 1000 பேரிடம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டது.  இதில் நான்கு மாணவர்களில் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர் என தெரிய வந்தது. இது குறித்து பிரின்ஸ் அலிகான் மருத்துவமனையின் சமூக சுகாதார இலாகாவின் தலைவர் டாக்டர் கிரந்தி ரயமானே கூறியதாவது;
.

மாணவர்களிடையே ஹூக்கா பிரபலமாகி இருப்பது நாங்கள் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. நிகோடின் அதில் இருக்கிறது என்பதுகூட பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இளைஞர்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவில் அடிப்படையில் அரசும், தொண்டு நிறுவனங்களும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

25% of Mumbai students are having the smoking habit

 
NewsFast Logo