Advertisment

Punnagai Logo

3 வயது சிறுமி இறந்ததற்கு எதிர்கட்சிகளே காரணம்.! - சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் குற்றச்சாட்டு..!

புதுடில்லி : மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மக்கள் உயிருடன் விளையாடும் விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை,அதிகரித்து வருவதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, நாடு தழுவிய, வேலை நிறுத்தப் போராட்டத்தால், வட இந்திய மாநிலங்களில் சிலவற்றில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு காணப்படவில்லை.

இது  குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் பேசுகையில்,

"பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். விலை ஏற்றம் குறித்த அரசின் கருத்தை புரிந்துள்ள மக்கள், அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த் அழைப்பை, மக்கள் நிராகரித்துள்ளனர்.

இதனால், காங்.,கும், பிற எதிர்க்கட்சி களும் உற்சாகம் இழந்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டி வரும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை, மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் சதி திட்டமிடுகின்றனர்.

பீஹாரில், எதிர்க்கட்சியினர் நடத்திய பாரத் பந்த்தால், 3 வயது சிறுமியை, குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. சிறுமி அழைத்து செல்லப்பட்ட ஆம்புலன்சை, எதிர்க்கட்சியினர் மறித்துள்ளனர். இதனால், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதற்கு, ராகுல் பொறுப்பேற்பாரா?

மக்கள் உயிருடன் விளையாடும் இதுபோன்ற விபரீத விளையாட்டை, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்".

என அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

3 year old girl died because of opposition - Law Minister Ravi Shankar Prasad's indictment

 
NewsFast Logo