Advertisment

Punnagai Logo

ஆதார் எதிர்ப்பு வழக்கு  உச்சநீதிமன்றத்தின் ஐவர் நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும்

அரசின் நலத்திட்டங்களுக்கும் மொபைலிலும் ஆதார் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சேர்த்து ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஐவர் கொண்ட அமர்வு அமைக்கப்பட  உள்ளது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மொபைலை ஆதாரை இணைக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார்.  இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவை ஒரு மாநில அரசு எதிர்க்க முடியாது எனவே மம்தா பானர்ஜியே தனது பெயரில் வழக்கு தொடரலாம் என்று அறிவுறுத்தியது.

இதற்கு முன்னதாக 10ம் மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் எழுதுவதற்கு ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இதே போன்று நலத்திட்டங்களை ஆதாருடன் இணைப்ப்தற்கு  எதிர்ப்பு தெரிவித்தும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

எனவே ஆதார் வழக்குகளை விசாரிப்பதற்கு முன்னதாக ஆதார் பதிவுக்கு ஒரு குடிமகனின் அனைத்து விபரங்களையும் அவருடைய கண் நிறம் உள்ளிட்ட பயோ மெட்ரிக் விபரங்களை சேகரிப்பது அவருடைய அந்தரங்க உரிமையை பாதிக்காதா என்ற கேள்வி எழுந்தது.  இதற்காக வரலாற்று சிறப்பு அம்சமாக 9  நீதிபதிகள் கொண்ட  அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்தரங்கம் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பு கூறியது. இவ்வாறான அடிப்படைக் கேள்விக்கான விடையை கண்டறிந்த பின்னரே தற்போது  உச்சநீதிபதிகள் ஐவர் கொண்ட அமர்வு ஆதார் எதிர்ப்பு வழக்குகளை ஒன்று சேர்த்து விசாரிக்க உள்ளது.

 

 
 

Advertisment

English Summary

5 judges constitution bench to hear the aadhar cases

 
NewsFast Logo