Advertisment

Punnagai Logo

ஆதார் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்- ஆஸ்திரேலிய நிறுவனம் எச்சரிக்கை

ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தகவல் பாதுகாப்பு அமைப்பான "டிராய் ஹன்ட்" எச்சரித்துள்ளது. இது தொடர்பாக டிராய் ஹன்ட் தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்;

 இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையிலேயே அதன் பாதுகாப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும், மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது.

 ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஆதார் இணையதள சர்வரில் உள்ள தகவல்களை திருடி, அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Aadhaar website security defects-Australian company warning

 
NewsFast Logo