Advertisment

Punnagai Logo

சொத்து பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயம்- மத்திய அரசின் அடுத்த அதிரடி

 

சொத்துப்  பரிவர்த்தனை அனைத்துக்கும்  ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால், சட்ட விரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்தாண்டு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு, புதிய, 500 ,  2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இதன்பின்னர்  நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும்  சேவை வரி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.  இதன்படி, நாடு முழுவதும் அசையா சொத்து பரிவர்த்தனைகள் அனைத்துக்கும், ஆதார் அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இது குறித்து, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர், ஹர்தீப் புரி கூறியதாவது:

அசையா சொத்து பரிவர்த்தனைகளுக்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்க, மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும். ஆதார் எண் கட்டாயமானால், ரியல் எஸ்டேட் துறையில் குவிந்து கிடக்கும் கறுப்புப்பணம் வெளியே வர வாய்ப்பு உண்டாகும். பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிப்பது தடுக்கப்படும். ஏற்கனவே,வங்கி கணக்குகளுடன்,

ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டு வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக, சொத்து பரிவர்த்தனைகளுக்கு ஆதார், கட்டாயம் ஆவது அவசியம்.

.இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

Aadhar compulsory for property exchange

 
NewsFast Logo