வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதள மொபைல் ஆப்களை முடக்கலாமா என்பது குறித்து தொலைத் தொடர்புத் துறை கருத்து கேட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதள மொபைல் ஆப்களினால் பரவும் வதந்திகள் சில சமயங்களில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் இதுபோன்ற வதந்திகளால் கூட்டு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் காலங்களில் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள மொபைல் ஆப்களை தற்காலிகமாக முடக்கி வைப்பது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளது.
இது குறித்து தொலைத் தொடர்புத் துறை அனுப்பி உள்ள கடிதத்தில், ‘‘தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ‘69ஏ’யின்படி, அச்சுறுத்தல் காலங்களில் சமூக வலைதள ஆப்களை முடக்குவது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சட்ட அமலாக்க அமைப்புகளும் கேள்வி எழுப்பி உள்ளன. இதற்கு இன்டர்நெட் சேவை வழங்கும் தொழில் நிறுவனங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
English Summary
An end to rumors-review of Facebook and Whattsapp