Advertisment

Punnagai Logo

இன்னொரு "செல்பீ " மரணம் - காரணம் கரடியா..மனிதனா ..?

ஒடிசா மாநிலம் , புவனேஷ்வரரில்  காயமடைந்த கரடியுடன், 'செல்பி' எடுக்க முயன்ற நபர் ஒருவரை கரடி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, கோராபுட் மாவட்டத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்ற, பிரபு பட்டாரா என்பவர் உறவினர்களுடன், நாபரங்பூர் மாவட்டத்திற்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது , இயற்கை உபாதைக்காக காரை நிறுத்திய போது, வனப் பகுதியில், காயமடைந்த கரடியை பார்த்த, பிரபு, அதனுடன், 'செல்பி' எடுக்கச் சென்றார். 

வேண்டாம் என கூறி உறவினர்கள் எச்சரித்தும் கேளாமல், கரடிக்கு மிக அருகில் சென்றார். அப்போது, கரடி, திடீரென அவரை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு சென்ற வனத் துறை அதிகாரிகள், பிரபுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைத்ததுடன், இறுதி சடங்கு செலவுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.

 
 

Advertisment

English Summary

Another "Selfie" death

 
NewsFast Logo