Advertisment

Punnagai Logo

அசாருதீனுக்கு புது பொறுப்பு - தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஆனார் 

சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முஹம்மது அசாருதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
 
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரசார கூட்டங்களில் பேசி தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் செயல் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

 
 

Advertisment

English Summary

Azharuddin appointed working president of Telangana Congress

 
NewsFast Logo