Advertisment

Punnagai Logo

பிச்சை.. குற்றம் அல்ல..! – உயர்நீதிமன்றம்

பிச்சை எடுப்பது குற்றம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிச்சை எடுப்பதை குற்றமாக கருதி தண்டனை அளிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஹர்ஷ் மந்தர், கர்னிகா சாவ்னி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது கடந்த மே மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, அரசால் ஏழை, எளியோருக்கு உணவு, வேலை வழங்க முடியாதபோது பிச்சை எடுப்பதை எவ்வாறு குற்றமாக கருத முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தற்போது , டெல்லி  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிச்சை எடுப்பது குற்றமே என்று வாதிட்டார்.

அதனைத்தொடர்ந்து , மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , "பிச்சை எடுப்பவர்கள் யாரும் அதை விரும்பி செய்வதில்லை. தங்களது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே, அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.

மேலும், பிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். அந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் பிச்சை எடுப்பதை குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கக் கூடாது " என தெரிவித்தனர்.

 
 

Advertisment

English Summary

Begging .. not a crime ..! - High Court

 
NewsFast Logo