Advertisment

Punnagai Logo

சூப்பர் நெருக்கடி நிலையை பா.ஜனதா பிறப்பித்துள்ளது - மம்தா பானர்ஜி விமர்சனம் 

அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு தொடர்பாக பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மோதல் போக்கு நேரிட்டுள்ளது. இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், அசாமிற்கு குழு ஒன்றை அனுப்பியது.

6 எம்.பி.க்கள், ஒரு மந்திரி, ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்ற குழுவை அசாமில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.  சில்சார் விமான நிலையத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் விமான நிலையம் சென்றதும் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு எங்களை தடுத்து நிறுத்தியது. போலீஸ் எங்களை தாக்கியது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குழுவில் இடம்பெற்று இருந்தவர்கள் குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பேசுகையில் ‘‘குழுவில் இடம் பெற்றுள்ள பெண்கள் உள்ளிட்டோரை போலீசார் அடித்துள்ளனர். சூப்பர் நெருக்கடி நிலையை பா.ஜனதா பிறப்பித்துள்ளது. அசாமில் அமைதி நிலவுவது உண்மை என்றால், ஏன் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்?’’ என்று கூறினார்.

 
 

Advertisment

English Summary

BJP has created a super emergency status - Mamata Banerjee

 
NewsFast Logo