Advertisment

Punnagai Logo

ராணுவ வீரர்கள் மரணம் - பா.ஜ.க.எம்.பி.சர்ச்சைப் பேச்சு

எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் இருக்கிறார்கள் என்ற பா.ஜ.க. எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லேத்போரா பகுதியில், சி.ஆர்.பி.எப் முகாம் மீது  ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "பொதுவாக ஒரு சின்ன கிராமத்தில் சண்டை நடந்தாலே பலர் காயமடைகிறார்கள். அப்படியிருக்கும்போது எல்லையில் பணி அமர்த்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது சகஜம்தான்.

எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் இருக்கிறார்கள் சொல்லுங்கள்? தினமும் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அதை மாற்ற முடியாது. குண்டுகளை செயலிழக்க செய்யும் முறை ஏதேனும் இருக்கிறதா என்ன? அப்படியிருந்தால் சொல்லுங்கள் அந்த முறையை நடைமுறைபடுத்தி ராணுவ வீரர்களை காப்பாற்றலாம்" ராணுவ வீரர்களின் மரணம் குறித்து பா.ஜ.க. எம்.பி.யான நேபால் சிங் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது. 

 
 

Advertisment

English Summary

Bjp Mp.Nepal Singh Controvercial Speech

 
NewsFast Logo