Advertisment

Punnagai Logo

ஆதார் பாணியில் பூதார்- ஆந்திராவில் விரைவில் அறிமுகம்

ஆதாரை போன்று ஆந்திராவில் நில உரிமையாளர்களுக்கு, 'பூதார்' அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்த உள்ளார்.

ஆந்திராவின், சித்துார் மாவட்டத்தில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

நில உரிமையாளருக்கு  அவர்களது நிலம் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய, 'பூதார்' அட்டை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அட்டைக்கும், ரகசிய எண் தரப்படும். இதை வைத்து, தன் நிலம் பற்றிய தகவல்களை, மிக எளிதில் நில உரிமையாளர் பெற முடியும். அந்த தகவல்களை, பிறர் அறிய முடியாத வகையில், பாதுகாக்கும்அம்சங்கள் இந்த அட்டையில் உள்ளன.

மேலும், ஆந்திர மக்களுக்கு, 'டிஜிட்டல் லாக்கர்' என்ற டிஜிட்டல் வழி சிறப்பு வசதியும் வழங்கப்பட உள்ளது. மக்கள், தங்கள் ஆவணங்கள் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம். உதாரணமாக, ஒருவரின் உடல் நலன் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, டிஜிட்டல் லாக்கரில் பாதுகாக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
 

Advertisment

English Summary

"Boodhar" in Aadhar style-Soon in Andhra

 
NewsFast Logo