Advertisment

Punnagai Logo

1-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ம் வகுப்பு மாணவி...

லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவனை 6-ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திய நிகழ்வு அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. அரியானாவின் ரியான் பள்ளியில் நடைபெற்றதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

6 வயதுடைய சிறுவனின் மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஆழமான கத்திக்குத்து விழுந்துள்ளது. ஆனால், தற்போது, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அந்த சிறுவன் அபாய கட்டத்தை தாண்டியுள்ளான்.

இந்த கத்திக்குத்துச் சம்பவத்துக்கு அதேபள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிதான் காரணம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாணவி புளூவேல் விளையாட்டினால், இதுபோன்ற முயற்சியில் இறங்கி இருக்கலாம் என்று பள்ளி சார்பில் புகார் கூறப்படுகிறது.

பள்ளியில் உள்ள 70 கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், மாணவன் கத்திகுத்து குறித்த வீடியோ கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Advertisment

English Summary

Boy Attacked With Knife In Lucknow School; Class 6 Girl Suspect, Say Sources

 
NewsFast Logo